Friday, December 2, 2011

தேய் பிறை



பொன்.காந்தன்



கட்டழகியென
கண்ணுக்குள் நிற்கிறாய் நேற்று
இன்று
பொட்டற்று போய்விட்ட
உன் முகமும்
புன்னகை தொலைந்த
உன் பொலிவுமாய்
விட்டு விடுதலையாக
புறப்பட்ட சிறகுகள்
கொட்டுண்டு
பட்டு பூச்சிகள் இரண்டை
பாசத்துள் அணைத்தபடி
கொட்டுகிற கண்ணீரை
குனிந்த மறைத்தபடி
முன்னே நிற்கிறாய் முழுமதியே!
என்னே விதியதுவோ
உன்னைப்போல் கண்ணீரால்
ஊர் நிறைந்து கிடக்கின்றது
மின்னல்போல் மறைந்த
உன் மிடுக்கான கனவுகள்
மீண்டும் இனிவருமா
இல்லை நீ தனி மரமா
இல்லை இல்லையென
சொல்லத்துடிக்கிறேன் நான்
இச்சொல்
மொத்தத்தமிழினத்தின் மொழியாகுமா!

1 comment:

  1. ‎'மின்னல்போல் மறைந்த
    உன் மிடுக்கான கனவுகள்
    மீண்டும் இனிவருமா'

    கலாசாரம் என்ற மொழிக்கே தூய்மையை தந்த காலம்
    தன்மானத் தமிழர்களின் வீரத்தையும் , கனவுகளினையும் சுமந்த காலம்
    ஈழத் திருநாட்டினில் ஓர் விந்தை மிகு உலகு பார் என, உலகம் வியந்து பார்த்த காலம்
    பெண்மையின் இலக்கணத்தை போற்றிய காலம்
    வீரத் திலகமிட்ட புருஷர்களை தாய் மண் சுமந்த காலம் ..............
    எல்லாமே மின்னலாய் மறைந்து விட்டன அண்ணா.
    இல்லை இல்லை இன்னும் ஒவ்வொரு தன்மானத் தமிழனின் உள்ளத்திலும் எரிமலையாய் கனன்று கொண்டிருக்கின்றன.
    மீண்டும் மீண்டும் எழுதட்டும் உங்கள் கரங்கள் , தமிழனின் பெருமையை விண் முட்டச் செய்யட்டும் . வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete