Sunday, August 28, 2016

பூமிப்பாடம்




வல்லையால் வருவானென
வாய்ச்சவடால் விட்டிருக்க
கொல்லையால்  வந்தான்
குடும்பியை அறுத்துச்சென்றான்
இல்லையேல் அவனை
இரண்டாய் பிளந்திருப்பேனென
வெறும் வாய் மெல்ல
மண்டையில் மயிர் கொட்டும்
மாறிச்சிந்தி
சண்டை  என வந்தால்
சட்டை கிழியத்தான் செய்யுமென்ற
இன்றைய தத்துவத்தையேனும்
நினைவில் கொள்
கொண்டை அறும்
குரல்வளை கிழியும்
மண்டையில் நாலோட்டை வரும்
மறைந்துபோய்
மறுவடிவம் எடுத்து
சூரனார் போல்
சூட்சுமம் காணவும் வேண்டும்

மன்னர் காலமா இது
கர்ணன் படத்தில்
கர்ச்சனை செய்து
கதாயுதமும் ஈட்டியும்
கொண்டு களமாட
மாறிச்சிந்தி
இன்றுபோய் போர்க்கு
நாளைவாவென சொல்ல
இதிகாசம் இயம்பும்
இழிச்சவாயர்கள் இன்றுண்டா
வண்டு வந்து பார்த்து
படமனுப்ப
ஒண்டுக்கிருப்பவனுக்கு இலக்குவைத்து
எறிகணை பாயும் காலம்
சொண்டுக்கு மட்டும்
குறிவைத்து சிவப்படிக்கும்
சினைப்பர் யுகம்

முன்னுக்கு நிண்டு
மூவாயிரம் யானை
நாலாயிரம் குதிரை
நாலாபக்கமும் தேர் நிறுத்தி
சங்கூதி சமர்புரிந்;த மூளை
கொஞ்சம் குந்தி இருந்து
மண்டையை கசக்கினதால்
பாட்டி காலம் முன்
ஏகே போட்டி செவின்
பீகே கைக்கு வந்தது
பிஸ்டல் கனோன் பிரசவமானது
ஆட்டி ஆமட் கார்
டசின் கணக்கில் ஓட்டும் மல்ரி
மிக் மிராஜ் டோறா மிதக்கும் டாங்கி
எல்லாம் நாடுகள் தூக்கி வைத்து
நானா நீயா நாண்டு பிடித்தன

நாமென்ன சும்மாவா
ஜொனி பசிலன் அருள்
தண்டவாளத்தில் ஊர்ந்து
எதிரியின் எல்லைநுழைந்து
ஏதோ ஏக்கம் கனவை விதைக்குமொன்று
சாரை நாகமென்று
புறப்படும்போதே
அன்னியரின் அடிவயிற்றை
கலக்கி இறைக்கும் இன்னொன்று
புளி பூவரசக்குள் ஒளித்து வைத்து
ஓடிப்போயெடுத்து
பொக்கணை இரணைமடுவில்
போயெழுப்பும் புட்பக விமானங்கள்
இப்படி எல்லாம்
வேறுவடிவில் வந்து
விலாவாரியாய் பார்த்து
மூக்கில் விரலை வைத்து
முழுசிக்கொண்ட உலகம்
இதுபோல எங்கள்
ஆயுத சந்தையில் புதிதாக இல்லை
புல்லரிக்கிறது
பூத்து காய்க்க முன்னர்
பிடிங்கி எறியவேணும் என்று
பார்த்து பார்த்திருந்து
எல்லை கடந்து
கொல்லையால் வந்து
அடியோடு சாய்த்து
ஒருவாறு முடித்தார்
சண்டையா பிடித்தார்
தந்திரங்கள் செய்தார்
தடவியும் கொடுத்தார்
பலவான்கள் அவர்
பசப்புக்கள் விட்டார்
பல வாறு நடித்தார்
எம் பாய்ச்சல் முடித்தார்
தடிமாடாய் தமிழர்
இலட்சம் பேரிருக்க
ஒரு சிலரே விடிவுக்கு
விதையாகிப் போனார்
இப்போதும் பலபேர்
வாய்ச்சவடால் விண்ணர்
வேறாரோ மண்ணுக்காய்
வீழ்ந்திடும்போது
கைதட்டி வாழும்
கடை நிலைப்பிறவி
இந்நிலை தொடர
இனிவரும் காலத்தில்
வல்லையால் வந்தே
வைத்திருக்கும் கோவணத்தை
இல்லை உனக்கேதுமில்லையென்று
எடுத்தவன் செல்வான்

Saturday, August 27, 2016

உணர்வு -பொன்.காந்தன்

PON.KAANTHAN .TNA

pon.kaanthan

PON.KAANTHAN

PON.KAANTHAN

tna meeting mulankaavil 30.07. 2015

pon. kaanthan TNA valaippaadu meeting

pon.kaanthan

vaddukoddayil irunthu mulli vaaikkaal varai -aivurai -pon.kanthan

அம்மா எங்கே!



நிலவுடுத்த நீள் விழி மங்கை
வீரத் தினவெடுத் தெழுந்து
தெருவிறங்கி தீட்சண்யம் கொண்டு
அரியாத்தை மரபுடுத்து மாண்புறு
மண் மீட்கப் பாய்ந்த நாளில்
எங்கள் கடல் வீரி
உடல் கரையக் கொண்ட உன்னதம்
அங்கயற்கண்ணி அறிவீர்
முன்னாளில்
அலை கரையில்
தோழியரொடுலவும் வேளை
உரைத்தனள் ஒரு சேதி
உள்ளிருந்த ஆதங்கம்
' ' நான் கட ல் மடியில் வெடித்து
காவியமாகும் நாள் நல்லூர் கந்தன்
திருவிழா நாளாய் இருப்பின் மிக்க மகிழ்ச்சி
அந்நாளில்தான் என் அம்மாவின் கையில்
அதிகம் காசு புழங்கும்
என் நினைவு நாளுக்கு
வீடு வரும் தோழியரை
நன்றாய் உபசரிப்பாள் அம்மா' ' என!
இப்போது நல்லூர் கந்தன் திருவிழா
நல்ல சனமாம்
கச்சான் விற்ற அங்கயற்கண்ணியின்
அன்னை எங்கே!

தைலம்



வீட்டு மூலைக்குள்
விளக்கு படாவிடத்தில்
மறைத்து வைத்து
குசினிக்குள் மாயும்
மனிசியை ஓரக்கண்ணால்
பார்த்தோடியோடி உறிஞ்சி
ஒன்றும் தெரியா பாவியாய்
விறாந்தையில் குந்தி
முட்டையிருக்கோப்பா
அஞ்சாறு வெங்காயம்
வெட்டி வதக்குவீரோ
என்று தொடங்கி
கதிரையிலிருந்தெழும்பையில்
கொஞ்சம் தளம்பி
அறுபது மைல் கடந்திருக்கும்
மனுசியின் அப்பரை இழுத்து விளம்பி
அடுப்படியில் அவள்
சட்டி பானையுடன் குழம்பி
புட்டையும் அருமாந்த
முட்டையையும் உள்ளேபோய்
மீண்டும் உறிஞ்சி வந்து
அரைகுறையில் சிலம்பி
விழுந்து படுக்கும் சிவக்கொழுந்து
எழுந்து எதுவும் தெரியா பாலனாய்
மற்றோர் நாள் மறைத்து வைத்ததை எடுத்து
உறிஞ்சுகையில்
கண்டுவிட்டான் கடைக்குட்டி
என்னப்பா எனக்கும் என்றான்
ஐயோ அது வேப்பெண்ணை தைலமென்றார்.
அம்மாவிடம் ஓடக்கடைக்குட்டி
அப்பாவுக்கு வருத்தம் என்றாள்
முட்டையை பொரித்தபடி !

வரமா! சாபமா!!



கள்ளுக்குள் மிதக்கும்
வண்டு மட்டைத்தேள்
குண்டுப் புளு கொடுக்கான்
கஞ்சல் கழிவு எல்லாம்
சுண்டிவிட்டு ஒரு சுருதியுடன்
மண்டிவரை மொண்டுகின்ற மயில்வாகனம்
பெண்டிலின்;முடியொன்று
சோத்தில்உதிர்ந்து இருக்க
குந்தியிருந்து குமட்ட வாந்தி
பந்தியிருந்து எழும்பி
பார்வையால் கறுவி
சந்திக்கடையில் சாப்பாடு கட்டி
முண்டிவிழுங்கி
முற்றத்திறங்கி பெருமூச்செறிந்து
அந்நாளிருந்து
இவள் சமையல் அசிங்கமென்று
அபாண்டங்கள் சுமத்தி
ஆறுகின்ற சண்டாளா!
கண்டி வீதியில்
கடுகதி வசுவொன்றில்
கன்னியிவளை கண்டேன்
கால்வரை கருங்கூந்தல்
என்று கண்செருகி
சுண்ணாகம் தூதனுப்பி
தம்பி தங்கமென்று
தரச்சான்று கொடுத்து
கைப்பிடித்த தேவதையின்
நாக சடையிருந்து ஒன்று
சோத்தில் விழுந்தால்
வரமா! சாபமா!!

தங்கம்

ஒலிம்பிக்கில் 
யார் யாருக்கோ தங்கம் வெள்ளி..
எல்லோரையும் பார்த்து
எனக்குள்ளே ஏகப்பட்ட மகிழ்ச்சி
எங்களூரில் திருவிழாவில் மணிக்கடைகளைபார்த்து
வீடு திரும்பும்
ஏழைச் சிறுவனைப் போ

பதில்



சந்தங்கள் தேடி
சாற்றிடத் தமிழில்
ஒன்றுக்கு நூறாய்
உள்ளத்தை பிழிந்து
என்றைக்கும் பாவினில்
இழைத்திடாதொரு
இனிமையை கொண்டு
பல்லக்கிலேற்றி
பாவையை மயக்க
சொல்லுக்கு சொல்
சோமபானம் தடவி
வில்லை வளைக்க
வில்லங்கப்படாமல்
எல்லைவரை சென்று
இதங்கள் சேர்த்து
ஆயிரம் காதல்
கதைகள் தொட்டு
ஆங்கு முத்து
எடுத்து கோர்த்து
அழகு மயிலை
சாட்சி வைத்து
அற்புதத்தேரில்
ஏறி நின்று
தீண்டி தேனை
மயக்குமென்று
தேவிரதியை
கலந்து பேசி
தெளிவாய் மன்மதன்
செவ்வை பார்த்து
நாடியவளை சென்று
நல்ல பதில் எதிர்பார்த்து
நறுக்காய் இதை
அனுப்பி விட
நங்கையவள் தந்த பதில்
லொல்
என் செவி பிடித்த
இன்றைய நாகரிகம்
கொஞ்சம் வேகம் போதாது
பஞ்சம் வரை பாடும் கவியே
இன்றவள் சாய்வது
பல்சர் கரிஷ்மா பாய்வதில்தான்!
ஓ! !

ஊடல்




கதவு திறந்து
அறைச்சாளரம்
யாவும் திறந்து
வா என்றேன்
வரவில்லை
ஆவி நோக
அடங்கா வெம்மையில்
நான் வாட
எங்கே நிக்கிறாய்
கூவி அழைத்தேன்
சாளரம் வழி தேடினேன்
வேலிப்பூவரசின்
காய்ந்த இலை தடவி
கருகி விழுந்த புல் தடவி
முகத்தை சுழித்தபடி
மெல்லச் சாளரத்தால்
வந்தறையில் குந்திற்று காற்று
கடுகடுப்போடு
கதையை தொடக்கினேன்
என்னை உனக்கு தெரியாதோ
அழைத்தபோது
ஏன் அசுமாத்தமில்லை
காலி முகத்திலும்
கசூரினாவிலும்
காக்கை தீவிலும்
சாமரம் வீசும் உனக்கு
என் இளைப்பு எரிச்சல்
எப்படிப் புரியும்
வயல் ஒழுங்கைகளில்
தினம் சந்திக்கும் சோடிகளுக்கு
நீ தான் இதம் கொடுத்து
இனிப்பு ஊட்டுகிறாயாம்
காதல் கடிதமொன்றில்
உன்னையும் பற்றி
ஓரிரு வரிகள் கண்டேன்.
உன் அம்மா அற்புதம்
முற்றத்தில் முன் விறாந்தையில்
என் தலையணைக்கருகே
என் மனமறிந்து உலவுவாள்
இப்போதில்லை
அந்த இனிய சுகம்
நீயோ காதலர்க்கும்
கடும் போதைக்கும்
சரம்போல நிக்கிறாய்
என்று நீட்டினேன்
நிறுத்தென்று
தொடங்கியது காற்று
முட்டாள்
முற்றத்திருந்த
தாத்தா கால வேம்பை
கொளுத்த காசுக்கு
அறுத்தாய் குடித்தாய்
கும்மாளமடித்தாய்
ஏதுமுரைத்தாயா முன்னெனக்கு
லீசிங்கில்
வீட்டில் ஆளுக்கிரண்டு
மின் விசிறி
காலுக்கும் தலைக்கும் வைத்து
கால மோட்டும் உனக்கு
நானெதற்கு
பனை விசிறி
மறந்த உனக்கு
மல்லிகை மணத்துடன்
நான் வந்து
மெல்லிதாய் தடவவேண்டுமா
பண்டிகை பரவச சடங்கெல்லாம்
குளிரூட்டி வைத்து கொண்டாடி
பணப்பெருமை
பறை சாற்றும் உனக்கு
காதோரம்
சில்லென்று போகவேண்டுமா
இப்போதியலா
இனி வரும் மாரியில்
பத்து வேம்பு வை
அதுவரை நான் உன்னொடு
பழகுவதில் அர்த்தமில்லை
ஊடலுடன்
முன் வாசல் வழி
எங்கேயோ போனது காற்று.

பற்றை





போர்முடிந்து
பொல்லாத வேலிக்குள்
புதைந்திருந்து அகதி வாழ்வு முடித்து
மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி
பூண்டு பிடித்து
மாண்டு கிடக்கும் என் வளவை
மறுசீரமைத்து
தீண்டுவோம் வாழ்வையென்று
தெருவில் இருந்து இறங்கி
தேத்தண்ணி சாப்பாடு
தாங்கிய பொட்டலத்தை
ஆங்கிருந்த வேலிப்பூவரசில்
பூனை தொடாமல் பொருத்திவிட்டு
கூடைப்பையிருந்த
கொடுவாள் கத்தி எடுத்து
சூடை மீன் வெட்ட முன்
சுறுக்கென்று தீட்டும் கல்லில்
இரண்டிழுவை இழுத்து
கூர் தடவி
ஏக்கர் நிறைந்து கிடந்த
நாயுண்ணி பற்றைகளை
பூக்கள் காய்கள் உதிர
கொத்தாய் கொத்தாய்
குலையோடு வெட்டி
குவித்தான் மூலையில் நம்மாள்
அட நாசமாய்ப்போவானே!
ஒரு வார்த்தையேனும்
அந்த நாயுண்ணிகள் பற்றி
நவிலவில்லை அவன்
காணி கிடைத்த சந்தோசம்
ஏணி வைத்து ஏற
எட்டுப்பத்தறையில் வீடுகட்டி
ஏசி பூட்டி
எழுப்பம் விடுவதுதான் அவன் எண்ணமாக்கும்!
கொடுவாள் வெட்டில்
கூனிப்போய் குவிந்துகிடந்த
நாயுண்ணி மரங்களை காணும்போது
நாவில் பிறக்கிறது நம் காலவரிகள்
பத்தினால்தான் பத்தியப்படுபவரும்
மலசலம் இளகிப்போய் இதமாகும் என்பவரும்
வெத்திலை சப்பினால்தான்
வேலை ஓடும் என்றவரும்
முள்ளிவாய்க்காலில்
பத்து நாயுண்ணி இலை
பல நூறு காசுக்கு வாங்கி
சன்னமழைக்குள்ளும்
சப்பி விழுங்கியதை எப்படி மறக்க
இப்பொழுது அதன் பெயர் பத்தை
இன்னும் சில மணியில் அது
அவன் வைக்கும் தீயில் பஸ்பமாகிவிடும்
குத்து மதிப்பாய்
குவிந்துகிடக்கும் நாயுண்ணிகளை
முள்ளிவாய்க்கால் கணிப்பில்
கூட்டிக்கழித்துப்பார்க்கிறேன்
ஒரு எழுபது எண்பது இலட்சம் பெறும்
உதிர்ந்து போன நாயுண்ணிகள்
உள்ளத்தில் வலி கிளறாவிடில்
பறந்து போன பல இலட்சம் உயிர்களை
மறந்துபோனதுபோல் எண்ணுகிறது மனசு!

தேன் நிலவு





எட்டாம் வகுப்பில்
மொட்டவிழ்ந்த அவள்
மோகனச் சிரிப்பில்
மயங்கி
கட்டினால் இவள்தானென
கனவு நூறு கண்டு
கடிதம் குடுத்து
பதில் வரும்வரை
பசியிருந்து
ஒப்பேறிய காதலை
அவளும் நானும்
தாலி கட்டும்வரை
தடை உடைத்து செல்வதற்கு
கடந்த கால காதலர்கள்
கண்ட பல சாத்திரிகள் முன்
கை நீட்டி
காரியம் நிறைவேறும்
கைதொழுதால் என்ற கோயில்களில் நேர்த்தி வைத்து
காப்பு கட்டி காவடி கற்பூர சட்டியெடுத்து
முட்டுக் காலில் இருந்து
முந்நூறு மந்திரம் உச்சரித்து
வீட்டுக்கு நம் காதலை சொல்ல
ஆளமர்த்தி
அவரை அடிக்கடி ஆசுவாசப்படுத்தி
ஈற்றில் எச்சில் விழுங்கி விழுங்கி
எல்லாம் வீட்டில் கொட்டி
காற்றில் பறப்பது போலானோம்
கலியாண நாள்
கட்டினேன் நேற்றவள் கழுத்தில்தாலி
மாதுளம் பழமென மயங்கி
நின்றவளை
தேனிலவு தேதி சொன்னேன்
கசூரினா போகலாமா
சங்குப்பிட்டி பாலத்தில்
உரசி நின்று ஒரு செல்பி எடுக்கலாமா
காலி போய் காற்று வாங்குவோமா
கண்டி நுவரெலியா
கதகதப்பு தேடலாமா
என் கனவுகளை அடுக்கிவிட்டேன்
புன்னகையுடன்
அவள் சொன்னாள்
எவனாவது ஒருவன்
மறைந்திருந்து படமெடுத்து
இத்தனை வருட நம் காதலுக்கு
இணைய தளங்களில்
கள்ளக்காதலர்கள் களியாட்டமென பெயர் சூட்டுவான்
தேவையா என்றாள்
தெளிவாய் இருந்தது
தேன் நிலவு எனக்கு.

கால சூசி




இன்றைய இரவு உணவு
மூத்தவள்
பிறைட் றைஸ் வேணுமென்கிறாள்
இளையவள் கொத்து ரொட்டி
பையன் மசாலா தோசை.....
மனைவி புறுபுறுக்கிறாள்
ஆகச் செல்லம் குடுக்கிறியள்
விடும்
ஆசை தீர சாப்பிடட்டும்
ஆனாலும்
கிழமையில் ஒரு நாள் கஞ்சி
கட்டாய உணவு வீட்டில்
என்ன நிச்சயம்
முள்ளிவாய்க்கால் போல் இக்கட்டு
இவர்களுக்கு வராதென்று
வரலாற்று கஞ்சி
வயிறு நிறைய குடியும் மக்காள்.

அர்த்தம்




நண்பர் ஒருவரின் மகள்
குமரியான குதூகலத்திற்கு
மனைவி சகிதம்
மாமியையும் கூடவே அழைத்து
ஆட்டோ அமர்த்தி
ஆலாத்தி எடுக்கும் நேரம்
கூட்டத்தோடு கூட்டமாய் இறங்கி
வாட்டி எடுக்கும் வெயிலுக்கு
வாய்க்கு இரண்டு பேணி
குளிர்பானம் வாங்கிவிட்டு
வசதியாய்த்தான் செய்கிறான்
வாய்க்குள் முணுமுணுத்து
மனைவியை முன்னேவிட்டு
மாதரோடு ஆராத்தி எடுக்க வைத்து
பலகாரம் கடித்து
பால் ரொட்டி கடித்து
பந்தியில் போயிருந்து
பார்வையை சுழலவிட்டேன்
பத்திருபது பரம ஏழைகள்
பசியாறிக் கொண்டிருந்தனர்
என் உள்ளத்தில் பேருவகை
வெட்கத்தை விட்டு
இரு தடவை போடச்சொல்லி
சலரோகம் மறந்து
பாயாசம் வடை வாழைப்பழம்வரை
உண்டு ஓர் திருப்தியுடன் எழும்பினேன்
மனைவியை அழைத்துச்சொன்னேன்
உறையில் வைத்த ஆயிரத்துடன்
இன்னும் ஒன்பதாயிரம் சேர்த்து
பெட்டையின் கையில் கொடு என்றேன்
அர்த்தமுடன் பார்த்தாள் மனையாளெனை.

காக்கைகளின் அறிவிப்பு




உப்பளக்காற்றை இதயத்தின் வேர் வ ரை
சுவாசித்து கடக்கின்றேன்
ஆத்ம கறைகளை போக்குமென்பது
என் அசையாத நம்பிக்கை
ஆனையிறவின் கடல் வெளியில்
இறாலுக்காக மொய்த்துக்கிடக்கும்
சைபீரிய வாத்துக்களும் கொக்குகளும்
இடுப்பளவு உவருக்குள்
வலை கட்டி கொண்டிருக்கும் சிநேகிதனும்
உப்புச்சேற்று மணமும்
உடன் பிறந்த சகோதரர்களை போல
என் கவிதைக்குள்
அனுமதியற்று நுழைவது ஆச்சரியமல்ல
கஸ்தூரிகள் வேர்கொண்டிருந்த
கனவு வெளியில்
அனைத்துமே பூசிப்பதற்குரியதென்பது
ஆகாய கடல் வெளியில் இருந்து நீளும்
பாயிரங்களுக்குள் தொடர்வது
எஞ்சியிருக்கின்ற
பளையின் தென்னந்தோப்புகளில்
சோட்டியை
இடுப்பில் செருகிவிட்டு
மோட்டையில் ஊறப்போட்;ட கிடுகுகளை
இழுத்துவருவதும்
தொலைபேசியில் வானொலியை கேட்டபடி பின்னுவதும்
என் இதயத்துக்குள் இருக்கின்ற
சிலபல ஏக்க ஓட்டைகளை வேய்கின்றது.
இத்தாவில் பனைகள்
நிமிர்ந்த கொள்ளிகளாய் இருப்பது
புறநானூற்றின் காட்சிகளில்
இத்தாவில் பரணியை
ஈராயிரம் பாக்கள் கொண்ட
தளகர்த்தன் ஒருவனின்சன்னதத்தை
மழை காலங்களுக்கு முன்னும்
உல்லாச விடுதிகளை கட்டி
காதல் ஜோடிகள் கீதங்களை
காற்று சுமப்பதற்கு முன்னும்
எழுதி முடிக்கும்படி விண்ணப்பம் விடுவது.
முகமாலை கடந்துபோகிறபோது
யாராவது இன்று
தற்கொலை செய்துகிடக்கிறார்களா என
தண்டவாளங்களில் தேடுகிறேன்
தண்டவாளங்களுக்கு அருகில்
நிற்கின்ற எல்லோரும் விரக்தியுற்றவர்கள் போலவும்
இன்றோ நாளையோ
தூக்கில் தொங்கியோ
யாழ் தேவியின் முன் பாய்ந்தோ
செத்து விடுவார்கள்போல
எதிர்மறையாகவே எல்லாம் ஓடிவருகின்றது
ஒரே அல்ககோல் மணம்
எங்கிருந்து
நல்ல தண்ணீர் கிணற்று பக்கங்களில் இருந்தா
வாசிக சாலைகளில் இருந்தா
மதவடியில் இருந்தா
பள்ளிக்கூட பின் மதிலோரத்தில் இருந்தா
கோயில் கேணியடியில் இருந்தா
பஸ் தரிப்பிடங்களில்
வசதிப்பட இருக்கும் நிழல்குடைகளில் இருந்தா
அல்ககோலில் தலைசுற்றி குமட்டி
கிருசாந்தி புதைந்த
செம்மணித் தெருவில் தலைகுப்புற விழுந்துவிட்டேன்
ஐயோ நான் குடிக்கவில்லை
சத்தியமாய் சத்தியமாய்
சவுக்கு மரங்கள் தள்ளாடியபடி சிரித்தன
என்னைப்பார்த்து
வெட்கமில்லை வெட்கமில்லை
அவமானமில்லை அவமானமில்லை
சரித்திரம் சரித்திரம்
சவுக்கு மரங்கள் வேதமோதின எனக்கு
ஜயசுக்குறு காலத்தில்
கனராயன்குளத்தின்
கானகக்குருவிகள் கத்துவது
வாடா பாப்பம் வாடா பாப்பம் என
நிலாந்தன் என்ற பாவலனுக்கு கேட்டதுபோல
என்னை கடந்த போகும்
காக்கைகள் காகா காகா
கால் கால் கால் அரை அரை
ஒன்று ஒன்று ஒன்று
காகாகாகாகா
வெறி வெறி வெறி வெறி
குடி குடி குடி குடி
காக்கையை இனி நம்பமாட்டேன்
ஒ! காக்காய்
முற்றத்தில் பனையில் இருந்து
கரவெட்டியில் இருக்கும்
என் பேத்தி கிழவிக்கு என் வரவை
நீ அறிவித்திருக்கப்போவதில்லை
குளத்தடிக்கு நல்ல தண்ணிக்குபோய்
நீராடிவிட்டு
கூந்தல் நீர் வடிய வடிய
பின்னழகில் பரவி
மணலில் கால் புதைய புதைய நடந்துவரும்
என் அழகிக்கும் நீ எதையும் அறிவித்திருக்கப்போவதில்லை
நல்லூர் சந்தணத்தை எடுத்து
நாலாபுறமும்
வீசி நடந்தால் இந்த மணம் போய்விடுமா
மாதாவின் திருவடியில் இருக்கும் குங்கிலியத்தை எடுத்து
ஊர் முழுக்க ஓடினால் இந்த மணம் மாறிவிடுமா
அல்ககோல்
சந்தண வாசமென தலைதடவி
தாள் பணிந்து
மெய் மறந்து கிடக்கும் மண்ணில்
அவசரமாய் தேடிதேடி பொறுக்கி எடுத்து
ஈமத்தாழிகளுக்குள் போட்டு
பொன்பரப்பித் தீவுகளில் புதைத்திடவேண்டும்போல்
கடைசியாய் ஒரு கேள்வி
பணம் இல்லாவிட்டால்
என்ன செய்வீர்கள்
தட்சணாமூர்த்தியின் தவிலை விற்போம்
கந்தமுருகேசனாரின் முதுசத்தை விற்போம்
துரைராசாவின் கண்டு பிடிப்புக்களை அடைவு வைப்போம்
விபுலானந்தரும் குடித்தார் என்றும்
மதுப்பிரியர் என்றும் மாற்றிவைப்போம்
என்ன நினைக்க!

கரும் பலகை



வானவில்லை கீறினான் 
ஏழை சிறுவன் 
ஒரு கணம் 
பச்சை மஞ்சள் சிவப்பாய் ஊதாவாய்
மாற ஆசைப்பட்டது கரும்பலகை 
முயன்றால்
கை கொடுக்க நினைக்கும்
கரும் பலகைகளை
எல்லா தெருக்களிலும் சந்திக்கலா
ம்

மூத்தவன்




சண்டிக்கட்டுக்கள் அவிழுகின்றன
அது அது அந்தந்த இடங்களில்.......
அம்மா வாசலை வாசலை பார்க்கிறாள்
பட்டியல் ஒன்று அவளுக்குள்
மூத்தவன் வருகிறான்
மூத்தவன்
இன்னொரு பெயர் கழுதையாகலாம் சுமப்பதனால்
அப்பாவின் பார்வையை
அம்மாவின் முகத்தில் உள்ள சோர்வை
சரியாக மொழிபெயர்க்கக்கூடியவன்
இளையவர்களுக்காக
படிக்க
நல்லவனாக இருக்க
உழைக்க
கோபப்பட
கோபித்துக்கொண்டுபோய் திரும்பிவர
தன் காதலை புதைத்துவைக்க
சாப்பிடாமல் இருக்க
கொள்ளிவைக்க
மூத்தவன் பிறந்திருந்தான்
மூத்தவன்
போய்வருவது பற்றி
எங்கு ஏன் என்ற கேள்விகள்
இல்லாத காலம் அழகானது
போய்விட்ட மூத்தவன்
திரும்பிவராக்காலமும் அழகானது
திரும்பி வந்தபோது
அம்மா அப்பாவின் பேரழுகை
இளையவர்களை
மூத்தவனாய் இருக்கவைத்தது
இப்பொழுதும்
என் மூத்தவன் இருந்திருந்தால்
என தொடங்கும் அம்மாக்களின்
கண்களில் மூத்தவன்
கருக்கலுக்குள் பின்னிருக்கும் சூரியன்போல.....
கதவு தட்டப்பட்ட பொழுதுகளில்
மூத்தவன் திறந்த கதவுகளில் எழுதப்பட்டிருக்கும்
மர்ம இரவுகள்
இன்னும் விடியாமல் பல வீடுகளில்
எலும்பும் தோலுமான
அம்மாவின் சுருக்கங்களில்
மூத்தவன் பற்றிய சரித்திரத்தை எழுதிவைத்திருக்கிறது
மூத்தவனுக்குள் இருந்த காதலை
அம்மாவும்
இளையவர்களும் அறிய ஆவல்பட்ட பொழுதுகளில்
அவன் நிலவுக்குப்பின்
அழகிய நதிகளின் ஆழத்தில்
தன் காதலியை மறைத்து வைத்தான்
அவள் கூந்தல்பற்றிய
இரகசியத்திலும்
கண்கள் பற்றிய இளையவர்களின்
கற்பனையிலும் மிதக்கும்
ஒரு இளவரசிக்காய் காத்திருக்கும் வீட்டில்
ஒரு தாய் மாமனுக்கான கடமைக்குப்பின்னும்
ஒரு நாள் குறிக்க முடியாமல் போனதுண்டு!
நாள்பட்ட இளமையுடன்
அண்மையில் எச்சமாய் இருந்த மூத்தவன்
ஒரு முதிர்கன்னியை தேடிக்கண்டுபிடித்தது பற்றியும்
ஒரு நாள் குறித்து
வசந்தத்தை வரவழைக்க
கேள்விகள்
சட்டங்கள்
சாட்சியங்கள் கையொப்பங்கள் என
பட்டபாடு பற்றியும்சொன்னபோது
அவன் ஒரு தியாகச்சிலையாய் தோன்றினான்
இப்பொழுதுகளில்
மூத்தவர்கள்
எங்கே போகிறார்கள்
எங்கே வருகிறார்கள்
ஏன் போகிறார்கள்
என்ன செய்கிறார்கள்
கேட்பதும் அறிவதும்
துடக்கெனக் கொள்வோம்

சிரிப்பு!




நொந்து பெற்றாள்
நூறு ஜென்மத்துக்கான பிள்ளையென பெயரெடு
தந்துவிட்டுபோ
தாராளம் மேன்மைகளை இத்தரணிக்கு
சந்துபொந்துகளில்
சதா உன் நாமம் ஒலிக்கட்டும்
வெந்துபடி
வேதனைகளை படியாக்கு
சிந்து கண்ணீர்
வீணான போன
நிமிசங்கள் நினைத்துவேதனைப்படு
வெடுக்கென்றெழு
வித்தைகள்
உனக்குள் இருக்கென்று நினை
உந்துகணையாய் இரு
உதவாக்கரையென பேர் வேண்டாம்
அந்திவரை சூரியனாய் இரு
அடுத்து நிலவாய் எழு
நட்சத்திரங்களாய் பரவு
நாடெங்கும் நின் பெயர்பரவ
பிறவி எடுத்து நில்
இந்த நிமிசமும் உனக்கே
இனிவரும் காலங்கள் உனக்கே
ஏந்திவரும் புகழ்மாலைகள் உனக்கே
ஏற்றமிகு வாழ்வுனக்கே
ஆற்றல்மிகு அத்திபாரத்தை
ஆழத்தில் வைத்துவிட்டு
தூங்கிவிடாதே
தூரத்தே நாளைய உலகம்
உன் கோபுரதரிசனத்தில்
ஆயிரம் காலங்கள்
உன்னை அழைத்துச்செல்லட்டும்
ஏழைத்துயரினில் புறப்படும் சிரிப்பை
உலகம் நாளை
பாடப்புத்தகமாக்க படி
நற்குடிமகராகத் துடி

மனசு




4ஜி பியில் ஒரு வேப்பமரம் 
1 ஜி பியில் ஒரு மல்லிகை பந்தல் 
இடப்பழத்தை தின்னாதிருக்க
ரஜிதனின் குரங்கு கலைக்கும் மிசின் 
புழுதியை வடி கட்டிட பூவரசு நெட் 
போதும் என்கிறது மனசு
பொத்தி வைத்திருக்கும் புன்னகையை காக்க ...

பற்றை





போர்முடிந்து
பொல்லாத வேலிக்குள்
புதைந்திருந்து அகதி வாழ்வு முடித்து
மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி
பூண்டு பிடித்து
மாண்டு கிடக்கும் என் வளவை
மறுசீரமைத்து
தீண்டுவோம் வாழ்வையென்று
தெருவில் இருந்து இறங்கி
தேத்தண்ணி சாப்பாடு
தாங்கிய பொட்டலத்தை
ஆங்கிருந்த வேலிப்பூவரசில்
பூனை தொடாமல் பொருத்திவிட்டு
கூடைப்பையிருந்த
கொடுவாள் கத்தி எடுத்து
சூடை மீன் வெட்ட முன்
சுறுக்கென்று தீட்டும் கல்லில்
இரண்டிழுவை இழுத்து
கூர் தடவி
ஏக்கர் நிறைந்து கிடந்த
நாயுண்ணி பற்றைகளை
பூக்கள் காய்கள் உதிர
கொத்தாய் கொத்தாய்
குலையோடு வெட்டி
குவித்தான் மூலையில் நம்மாள்
அட நாசமாய்ப்போவானே!
ஒரு வார்த்தையேனும்
அந்த நாயுண்ணிகள் பற்றி
நவிலவில்லை அவன்
காணி கிடைத்த சந்தோசம்
ஏணி வைத்து ஏற
எட்டுப்பத்தறையில் வீடுகட்டி
ஏசி பூட்டி
எழுப்பம் விடுவதுதான் அவன் எண்ணமாக்கும்!
கொடுவாள் வெட்டில்
கூனிப்போய் குவிந்துகிடந்த
நாயுண்ணி மரங்களை காணும்போது
நாவில் பிறக்கிறது நம் காலவரிகள்
பத்தினால்தான் பத்தியப்படுபவரும்
மலசலம் இளகிப்போய் இதமாகும் என்பவரும்
வெத்திலை சப்பினால்தான்
வேலை ஓடும் என்றவரும்
முள்ளிவாய்க்காலில்
பத்து நாயுண்ணி இலை
பல நூறு காசுக்கு வாங்கி
சன்னமழைக்குள்ளும்
சப்பி விழுங்கியதை எப்படி மறக்க
இப்பொழுது அதன் பெயர் பத்தை
இன்னும் சில மணியில் அது
அவன் வைக்கும் தீயில் பஸ்பமாகிவிடும்
குத்து மதிப்பாய்
குவிந்துகிடக்கும் நாயுண்ணிகளை
முள்ளிவாய்க்கால் கணிப்பில்
கூட்டிக்கழித்துப்பார்க்கிறேன்
ஒரு எழுபது எண்பது இலட்சம் பெறும்
உதிர்ந்து போன நாயுண்ணிகள்
உள்ளத்தில் வலி கிளறாவிடில்
பறந்து போன பல இலட்சம் உயிர்களை
மறந்துபோனதுபோல் எண்ணுகிறது மனசு!

கச்சான் விலை




விலை கேட்டு
கேட்டு நீ
ஒற்றை சுருள் வாங்க முன்பு
பத்து பதினைந்துஉன் வாய்க்குள்
கல் என்கிறாய்
மண் என்கிறாய்
கருகல் என்கிறாய்
ஆனாலும்
ஒவ்வாதென
ஒங்காளித்தாய் இல்லை
நல்லாய் சப்பினாய்
பாவம் கிழவி விட்டுவிடு
மாதம் முழுக்க
மணல் பரவி
மார்பு நோக வறுத்து
உன் வாய் ருசி பார்ப்பதால்
கிழவியின் வாழ்வாதாரம் நாசம்
ஐயா தம்பி ராசா
உன் வாடிக்கை வேண்டாம் என்பதே
கிழவிக்கு இலாபம்