Saturday, August 27, 2016

அம்மா எங்கே!



நிலவுடுத்த நீள் விழி மங்கை
வீரத் தினவெடுத் தெழுந்து
தெருவிறங்கி தீட்சண்யம் கொண்டு
அரியாத்தை மரபுடுத்து மாண்புறு
மண் மீட்கப் பாய்ந்த நாளில்
எங்கள் கடல் வீரி
உடல் கரையக் கொண்ட உன்னதம்
அங்கயற்கண்ணி அறிவீர்
முன்னாளில்
அலை கரையில்
தோழியரொடுலவும் வேளை
உரைத்தனள் ஒரு சேதி
உள்ளிருந்த ஆதங்கம்
' ' நான் கட ல் மடியில் வெடித்து
காவியமாகும் நாள் நல்லூர் கந்தன்
திருவிழா நாளாய் இருப்பின் மிக்க மகிழ்ச்சி
அந்நாளில்தான் என் அம்மாவின் கையில்
அதிகம் காசு புழங்கும்
என் நினைவு நாளுக்கு
வீடு வரும் தோழியரை
நன்றாய் உபசரிப்பாள் அம்மா' ' என!
இப்போது நல்லூர் கந்தன் திருவிழா
நல்ல சனமாம்
கச்சான் விற்ற அங்கயற்கண்ணியின்
அன்னை எங்கே!

No comments:

Post a Comment