Saturday, August 27, 2016

வரமா! சாபமா!!



கள்ளுக்குள் மிதக்கும்
வண்டு மட்டைத்தேள்
குண்டுப் புளு கொடுக்கான்
கஞ்சல் கழிவு எல்லாம்
சுண்டிவிட்டு ஒரு சுருதியுடன்
மண்டிவரை மொண்டுகின்ற மயில்வாகனம்
பெண்டிலின்;முடியொன்று
சோத்தில்உதிர்ந்து இருக்க
குந்தியிருந்து குமட்ட வாந்தி
பந்தியிருந்து எழும்பி
பார்வையால் கறுவி
சந்திக்கடையில் சாப்பாடு கட்டி
முண்டிவிழுங்கி
முற்றத்திறங்கி பெருமூச்செறிந்து
அந்நாளிருந்து
இவள் சமையல் அசிங்கமென்று
அபாண்டங்கள் சுமத்தி
ஆறுகின்ற சண்டாளா!
கண்டி வீதியில்
கடுகதி வசுவொன்றில்
கன்னியிவளை கண்டேன்
கால்வரை கருங்கூந்தல்
என்று கண்செருகி
சுண்ணாகம் தூதனுப்பி
தம்பி தங்கமென்று
தரச்சான்று கொடுத்து
கைப்பிடித்த தேவதையின்
நாக சடையிருந்து ஒன்று
சோத்தில் விழுந்தால்
வரமா! சாபமா!!

No comments:

Post a Comment