Saturday, August 27, 2016

தைலம்



வீட்டு மூலைக்குள்
விளக்கு படாவிடத்தில்
மறைத்து வைத்து
குசினிக்குள் மாயும்
மனிசியை ஓரக்கண்ணால்
பார்த்தோடியோடி உறிஞ்சி
ஒன்றும் தெரியா பாவியாய்
விறாந்தையில் குந்தி
முட்டையிருக்கோப்பா
அஞ்சாறு வெங்காயம்
வெட்டி வதக்குவீரோ
என்று தொடங்கி
கதிரையிலிருந்தெழும்பையில்
கொஞ்சம் தளம்பி
அறுபது மைல் கடந்திருக்கும்
மனுசியின் அப்பரை இழுத்து விளம்பி
அடுப்படியில் அவள்
சட்டி பானையுடன் குழம்பி
புட்டையும் அருமாந்த
முட்டையையும் உள்ளேபோய்
மீண்டும் உறிஞ்சி வந்து
அரைகுறையில் சிலம்பி
விழுந்து படுக்கும் சிவக்கொழுந்து
எழுந்து எதுவும் தெரியா பாலனாய்
மற்றோர் நாள் மறைத்து வைத்ததை எடுத்து
உறிஞ்சுகையில்
கண்டுவிட்டான் கடைக்குட்டி
என்னப்பா எனக்கும் என்றான்
ஐயோ அது வேப்பெண்ணை தைலமென்றார்.
அம்மாவிடம் ஓடக்கடைக்குட்டி
அப்பாவுக்கு வருத்தம் என்றாள்
முட்டையை பொரித்தபடி !

No comments:

Post a Comment