Sunday, July 3, 2016

சிரிப்பு!



நொந்து பெற்றாள்
நூறு ஜென்மத்துக்கான பிள்ளையென பெயரெடு
தந்துவிட்டுபோ
தாராளம் மேன்மைகளை இத்தரணிக்கு
சந்துபொந்துகளில்
சதா உன் நாமம் ஒலிக்கட்டும்
வெந்துபடி
வேதனைகளை படியாக்கு
சிந்து கண்ணீர்
வீணான போன
நிமிசங்கள் நினைத்துவேதனைப்படு
வெடுக்கென்றெழு
வித்தைகள்
உனக்குள் இருக்கென்று நினை
உந்துகணையாய் இரு
உதவாக்கரையென பேர் வேண்டாம்
அந்திவரை சூரியனாய் இரு
அடுத்து நிலவாய் எழு
நட்சத்திரங்களாய் பரவு
நாடெங்கும் நின் பெயர்பரவ
பிறவி எடுத்து நில்
இந்த நிமிசமும் உனக்கே
இனிவரும் காலங்கள் உனக்கே
ஏந்திவரும் புகழ்மாலைகள் உனக்கே
ஏற்றமிகு வாழ்வுனக்கே
ஆற்றல்மிகு அத்திபாரத்தை
ஆழத்தில் வைத்துவிட்டு
தூங்கிவிடாதே
தூரத்தே நாளைய உலகம்
உன் கோபுரதரிசனத்தில்
ஆயிரம் காலங்கள்
உன்னை அழைத்துச்செல்லட்டும்
ஏழைத்துயரினில் புறப்படும் சிரிப்பை
உலகம் நாளை
பாடப்புத்தகமாக்க படி
நற்குடிமகராகத் துடி

No comments:

Post a Comment