Sunday, July 3, 2016

கச்சான் விலை



விலை கேட்டு
கேட்டு நீ
ஒற்றை சுருள் வாங்க முன்பு
பத்து பதினைந்துஉன் வாய்க்குள்
கல் என்கிறாய்
மண் என்கிறாய்
கருகல் என்கிறாய்
ஆனாலும்
ஒவ்வாதென
ஒங்காளித்தாய் இல்லை
நல்லாய் சப்பினாய்
பாவம் கிழவி விட்டுவிடு
மாதம் முழுக்க
மணல் பரவி
மார்பு நோக வறுத்து
உன் வாய் ருசி பார்ப்பதால்
கிழவியின் வாழ்வாதாரம் நாசம்
ஐயா தம்பி ராசா
உன் வாடிக்கை வேண்டாம் என்பதே
கிழவிக்கு இலாபம்

No comments:

Post a Comment