Sunday, July 3, 2016

அடர்ந்த வேரின் குளிர்ச்சி


குருவிச்சி நாச்சி
நீ இல்லாத நாட்களில்
என் குதிரைகளின் குழம்புகளில்
ஓசை முடிந்துவிட்டதாக உணர்கிறேன்.
அவை
கழுதையை போலவோ
அழுக்கு நிறைந்த பன்றியைப்போலவோ
என்னை ஏற்றிச்செல்கின்றன.
உனது எதிர்பார்ப்புகளில்
உலவித்திரிந்த நாட்களில் காடு வழிவிட்டது.
இப்போது இலைக்குஇலை தடைகள்.
மரத்துக்கு மரம் காயங்கள்.
நான் எங்கு நிற்கின்றேன்.


உனது தைலங்கள் தடவிய நறுமணமும்
குருவிகளின் ஓசையும் கலந்த
உன் சங்கீதமும் எங்கும் பரவியிருக்க
நான் உனக்காக எல்லாவற்றையும் இழக்கவும்
எல்லாவற்றையும்  எடுக்கவும் சித்தமாயிருந்தான்.
இப்பொழுது ஒரு மாதிரி இருக்கின்றது
பெரிய வயிற்றில் இருந்து
குமட்டுவது போன்றிருக்கின்றது எனது வார்த்தைகள்.
 ஓ குருவிச்சிநாச்சி!
அடர்ந்த வேரின் குளிர்ச்சியாய் இருந்த நம் காதல்
எதை எழுதிச்செல்லப்போகின்றது இளவரசர்களுக்காக......

No comments:

Post a Comment